சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம்
படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்
நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023!

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 30ஆவது நினைவினை முன்னிட்டு 26வது தடவையாக இளையோர், பெண்கள், வளர்ந்தோர் பிரிவுகளுக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது கடந்த 08.01.2023 ஞாயிறு மற்றும் 14.01.2023 சனி ஆகிய இரு நாட்களும் சூரிச், பேர்ண் மாநிலங்களில் அமைந்துள்ள உள்ளரங்க மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்