தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக (21/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக (21/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

மேலும்

சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து இன்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது. கடந்து வரும் பாதைகளில் பிரித்தானிய அனைத்து அரசியற்கட்சிகளுக்கும் பிரதமர் இல்லத்திலும் , நெதர்லாந்து வெளி நாட்டமைச்சு, அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் மற்றும் மாநகரசபைகள் போன்ற முக்கிய அரசியல் மையங்களில் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தியும் தமிழீழமே நிரந்த தீர்வு என முன்னிறுத்தி தமிழர்களின் வேணவாக்கள் உறுதியாக பதிவு செய்யப்பட்டது.

மேலும்