மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும். இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத்தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும்.

மேலும்

யாழ். இந்துக்கல்லூரி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் “திடல்” திட்டத்தினூடு புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானம் 12/11/2021 உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும்

தவளை பாய்ச்சல் நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (456) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்

11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “தவளை பாய்ச்சல்” நடவடிக்கையில். பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும்