ஐநா பொதுச் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோக் நகருக்குச் சென்றிருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்ச, கடந்த ஞாயிறன்று ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ கட்டர்ஸ்சை சந்தித்தார். அச்சந்திப்பின் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுளார்.
மேலும்Year: 2021
லொகான் ரத்வத்தையின் அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-09-2021 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் முன்வைத்த பிரேரணை / கேள்வி
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்.
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள்.
மேலும்கடமையுணர்வு கொண்ட கப்டன் கலைஞன்
யாழ்மாவட்டத்தில் வடமராட்சிகிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப்படிப்பபை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்பேகாராட்டத்தில் இணைத்துக்கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப்பயிற்சிகளை முடித்துக்கொண்டபின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச்செயற்படலானார்.
மேலும்சிறப்புற நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு
முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 25 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் 19.09.2021 அன்று முன்னாள் போராளி சுஜீபன் தலைமையில் நடைபெற்றது.
மேலும்கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் – பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 27(2) இன் கீழ் நாளை விசேட பிரேரணை – கஜேந்திரகுமார் எம்பி
சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பானஇராஜாங்க அமைச்சர் லெகான் ரத்வத்த அவர்கள், தனது பதவிநிலை அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 12/09/21 அன்று மாலை 6.00 மணியளவில், நிறை போதைக்குள்ளான நிலையிலும் , அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் கொண்டுவந்து நிறுத்துமாறு பணித்திருந்தார்.
மேலும்சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.
48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது.
மேலும்ஐ.நா முன்றலில் சீரற்ற காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் திரண்ட தமிழ்மக்கள்!!
எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்.
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
மேலும்