Read Time:1 Minute, 8 Second
எதிர்வரும் நவம்பர் 27, 2021 சனிக்கிழமை இடம்பெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்சு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊடகங்கள் வரும் 25.11.2021 வியாழக்கிழமைக்கு முன்னதாகத் தமது விபரங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பதிவுசெய்து எமது அனுமதியைப் பெற்ற ஊடகங்களே மாவீரர் நாள் மண்டபத்தினுள் அனுமதிக்கப்படுவர் என்பதையும் முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்வதன்மூலம் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தினமும் பிற்பகல் 14.00 மணிமுதல் 20.00 மணிவரை எமது அலுவலகத்தில் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நன்றி!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு