பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு கடந்த (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியிலும் இன்று 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தன.
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு இருபிரிவுகளாக இடம்பெற்றது. இருதினங்களும் காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பமான இச்செயலமர்வில் அண்மையில் கோவிட் பெரும் தொற்றுக்காலப் பகுதியில் சாவடைந்த ஆசிரிய பயிற்றுநர் சிவராஜா ஜெகன் , கொலம்,சேர்ஜி,நந்தியார் தமிழ்ச்சோலை ஆசிரியை இராசநாயகம் உதயமாலா, பொபினி தமிழ்ச்சோலை நிர்வாகி நந்தகுமார் அமுதராணி ஆகியோர் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)