5 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியம் (புருசல் பெல்சியம்) முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தோடு தொடர்கின்றது.

இன்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழ மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து பெரும் எழுச்சியோடு மனித நேய ஈருருளிப்பயணம் புருசல் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி ஆரம்பமானது.

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் எட்டாம்; ஆண்டு நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் 05.09.2021 அன்று நினைவுகூரப்பட்டது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம் 4ம் நாளாக 340Km தொலைவு கடந்து பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்தது.

இன்று காலை 05.09.2021 பிரேடா ,நெதர்லாந்து மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மற்றும் தமிழீழமே தமிழர்களுடைய நிரந்த தீர்வு என எழுச்சியோடு மனித நேய செயற்பாட்டாளர்கள் தம் பயணத்தை தொடர்ந்தார்கள். மேலும் நெதர்லாந்து கிளைப்பொறுப்பாளர் திரு ஜெயா அண்ணையும் வருகை தந்து பயணத்தினை ஆரம்பித்து வைத்தார்.

மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்!

இந்திய அரசிடம் ஐந்து  அம்சக் கோரிக்கையை முன்வைத்து நீர் கூட அருந்தாது பன்னிருநாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ”தீயாக தீபம் திலீபனின்  34ஆம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பிரான்சில் எதிர்வரும் வாரம் புதன்கிழமை ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத்தூபி முன்பாக ஆரம்பமாகின்றது.

மேலும்

சிறிலங்கா அரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் ஐந்தாவது நாளாக ஐ.நா நோக்கி தொடர்ந்து பணிக்கும் நீதிக்கான பயணம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும், அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 05/09/2021 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Vantoux நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Les Étangs, Brouck, Hombourg-Haut, Grundviller, Sarralbe, Sarre-Union, Eschwiller, Hirschland, Bourscheid, Phalsbourg, ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

மேலும்

கப்டன் இளம்தீ அவர்களின் 13வது ஆண்டு நினைவுநாள் இன்று

2007ம் ஆண்டு அமைப்பில் இணைந்த கப்டன் இளம்தீ,  கனரகஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இணைந்து அதில் தனக்கான பயிற்சிபெற்று போராளிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்த வேளையில்

மேலும்

3ம் நாளாக (04/09/2021) பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் 270Km கடந்து நெதர்லாந்தில் நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது. அந்தவகையில் 23 ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் கடந்த 02.09.2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து இன்று 04.09.2021 நெதர்லாந்தின் ஊடாக பயணித்து பெல்சியம் நாட்டின் எல்லையினை அண்மித்துக்கொண்டு இருக்கின்றது.

மேலும்

பிரான்சு, தொர்சி பிரதேசத்தில் நடைபெற்ற அனைத்து நாட்டு சங்கங்களின் Forum என்ற நிகழ்வு

பிரான்சு 77 மாவட்டத்தில் ஒன்றான தொர்சி பிரதேசத்தில் மாநகரசபையின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் அனைத்து நாட்டு சங்கங்களின் Forum என்ற நிகழ்வை 04.09.2021 பி. பகல் 13.00 யில் இருந்து நடாத்தியிருந்தனர்.

மேலும்