கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல்கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பல் மீதான கடற்கரும்புலித்தாக்குதல் ஒரு மீள் பார்வை.

0 0
Read Time:5 Minute, 33 Second

வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதானதாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு .தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


அதற்கமைவாக கடற்புலிகளின் அணிகள் பிரிக்கப்பட்டு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்கள் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் தலைமையில் வேவு நடவடிக்கைகளுக்கு நாலாபுறமும் அனுப்பப்டடன வேவு வீரர்களின் கண்களில் சிக்கிக்கொண்டது
சாகரவர்த்தனா .


இலங்கை கடற்படையின் நான்கு பெரிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களில் சாகராவர்த்தனாவும் ஒன்றாகும் .இது 39.8m நீளமும் 7m அகலமும் கொண்டதாகும் .இதன் பிரதான ஆயுதங்களான. ஒரு 40mmL/70 பீரங்கியும் இரண்டு 25mm கனோனும் இரண்டு 14.5mm கனரகத்துப்பாக்கி இரண்டும் ஐம்பது கலிபர் துப்பாக்கிகள் பி.கே ரகத் துப்பாக்கிகள் ஏ.கே ரகத் துப்பாக்கிகளும் உள்ளடக்கிய இக் கப்பல் 15 knots வேகத்தில் செல்லும் (மணித்தியாலத்தில் பதினைந்து கடல்மைல்வேகத்தில் செல்லும்) இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக கப்டன் தர அதிகாரியும் அவரின் கீழ் ஐம்பத்தியிரண்டு கடற்படையினர் பணியிலிருந்தார்கள் .


இப்பாரிய கப்பல் பற்றிய தகவல்கள் தலைவர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக இந்த பாரிய ஆழ்கடல் கப்பலுக்கான தாக்குதற் திட்டம் மிகவும் நேர்த்தியான முறையில் கப்பலின் எந்தப்பகுதி பலவீனம் என்பதை இனங்கண்டு அதற்கேற்ப தாக்குதல் திட்டம் தலைவர் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடற்புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. மட்டுமன்றி இப்பாரிய கப்பல் தப்பக்கூடாது என்று உறுதியாகவும் தெளிவாகவும் கூறி கடற்புலிகளை வழியனுப்பிவைத்தார்.

இத்தாக்குதல் திட்டத்தின்படி கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகள் தமது படகுகளால் மோதி கப்பலை மூழ்கடிப்பார்கள். அதற்கமைவாக19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக்கடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்புக்கட்டளைக்கப்பல் மீது லெப் கேணல் டேவிற் தலைமையிலான சண்டைப் படகுகள் முறையே மாவீரர்களான லெப் கேணல் நிமல், லெப் கேணல் சலீம், கடற்கரும்புலி லெப்.கேணல் ரதீஸ், மேஐர் கண்ணன், கடற்கரும்புலி மேஐர் சுடரொளி, கடற்கரும்புலி கப்டன் தணிகை, கப்டன் தாயகி, மேஐர் சிங்கன், மேஐர் கனியன், கடற்கரும்புலி மேஐர் வினோதா, கப்டன் வில்வம்.ஆகியோர் தமது படகுகளால் தாக்கி கடற்கரும்புலிகளுக்கு வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகளான லெப்.கேணல் நளாயினி, மேஐர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோர் தமது கரும்புலிப்படகுகளால் மோதி கப்பலை மூழ்கடித்து கற்பிட்டக்கடலில் காவியமானார்கள்.

இதுவே கடற்புலிகளால் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக தாக்கி மூழ்கடிக்கப்பட்ட முதலாவது பாரிய கப்பலாகும். அது மட்டுமன்றி கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையனியான சாள்ஸ் படையணியின் முதலாவது தாக்குதலாகும். அந்தநேரம் ஆண் பெண் போராளிகளை இணைத்து உருவாக்கப்பட்டதே சாள்ஸ் படையணியாகும். இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவின் பங்கும் மிகவும் அளப்பரியது. மேஐர் இன்பநிலா கடற்கரும்புலி மேஐர் பரன் தலைமையிலான அணியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியையும் செவ்வனவே செய்திருந்தார்கள். இந்நடவடிக்கைகளை தலைவர் அவர்களின் நேரடிநெறிப்படுத்தலில் சிறப்புத்தளபதி சூசை அவர்களும் தளபதி கங்கைஅமரன் அவர்களும் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரும் செவ்வனவே வழிநடாத்தியிருந்தர்கள். இத்தாக்குதலில் பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன. இக்கப்பல் கப்டன் கடற்புலிகளால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

எழுத்துருவாக்கம்..சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment