அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 10/09/2021 வெள்ளிக்கிழமை காலை Doucier நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Villards-d’Héria, Lavancia-Epercy, Oyonnax, Échallon, Valserhône , Eloise, Dingy-en-Vuache, Viry, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Viry நகரசபையுடன் பத்தாவது நாள் நிறைவடைந்தது.




சில நகரசபைகள் குளிர்பாணங்கள் சிற்றுண்டிகள் வழங்கி மிகவும் அன்போடு வரவேற்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தொடர்பாக விரிவாக தெரிந்து கொண்டனர். மேலும் தமிழ்மக்களுக்கு ஆதரவான தீர்மானம் விரைவில் நிறைவேற்ற ஒழுங்குகள் செய்வதாக உறுதி அளித்தார்கள். தொடர்சியாக சில பிரெஞ்சு ஊடகங்கள் நீதிக்கான பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
https://www.lalsace.fr/politique/2021/09/07/tamouls-la-caravane-des-droits-de-l-homme-fait-etape-a-mulhousehttps://www.dna.fr/politique/2021/09/07/tamouls-la-caravane-des-dr
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச விசாரணை நடாத்துவதற்கு பிரெஞ்சு அரசு முன்வர வேண்டும் என்ற செய்தியை ஊடகங்கள் முன்நிலைப்படுத்துவது நீதிக்கான பயணத்திற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது.
