பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு பிரிவு பொறுப்பாளர் திரு பாலகுமார், பிரான்ஸ் தமிழ்இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு ந.நிந்துலன் ஆகியோருடன் தொர்சி பிராங்கோ தமிழ் சங்க பிரதிநிகள், ந.ஜெயசீலன்,ஜெ .அமிர்தா,
ம.சுதாகரன் , இளையோர் அமைப்பினர் செல்வன்
ஜெ. நிசாகரன், ஜெ.நிசாந்தினி ஆகியோர் சந்தித்தனர்.
நுண்கொல்லி 19 காலத்தில் நீண்டகால இடைவெளியில் பின்னர் நகரபிதாவுடன் மலர்சொண்டு வழங்கி வாழ்த்துக்களுடன்
சந்திப்பு ஆரம்பமாகியது.
முதலில் பிரங்கோ தமிழ்ச்சங்கம் தொர்சி நகரபிதாவிற்க்கு
கடந்த 24 வருடங்களாக தமிழ்ச்சோலை பள்ளிக்கு வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும் தொர்சி நகரசபையுடனும் பிரெஞ்சு ,இதர சமூகத்துடன் செயலாற்ற தொர்சி வாழ் தமிழர்களின் விருப்பத்தினை தெரிவித்தனர்.
நகரபிதா இளையோர்களின் பங்களிப்பிற்க்கு நன்றி தெரிவித்தும்
தொர்சி நகரசபையின் செயல் திட்டங்களை
தமிழ் சமூகத்திடம் கொண்டு செல்ல ஓர் தொடர்பாடலை ஏற்படுத்துமாறும்.
நகரவிழாக்களில் பங்குபற்றுமாறும் தொர்சி பிராங்கோ தமிழ்சங்கத்திடம்
வேண்டிக்கொண்டார்.
இறுதியில் பிரான்ஸ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன்
ந. நிந்துலனால்
நகரபிதாவிற்க்கும் நகரசபை உறுப்பினர்களுக்கும் ஈழத்தமிழர்களின் வரலாறும் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட இனவழிப்பு வரலாற்றை கணனிமூலம் தகவல்களை மிக தெளிவாக விளங்கப்படுத்தினார் அதனை அனைவரும் மிகவும் கரிசனையாக கேட்டு விளங்கிக்கொண்டனர்.
முடிவில் நகரபிதாவிற்கு சந்திப்பிற்க்கு நேரம் ஒதுக்கி சந்தித்தற்க்கு பிராங்கோ தமிழ்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
