1991.04ம் மாதம் பிற்பகுதியில் மன்னார் மாவட்டம் தள்ளாடி இராணுவமுகாமை பாதுகாப்பதற்காகவும் விடுதலைப்புலிகளின் கடல் விநியோக நடவடிக்கைளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஏற்கனவே இருந்த நறுவிலிக்குள மாதிரி இலங்கை இராணுவ முகாமை
ஒரு பாரிய இராணுவமுகாமாக அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தொகுதி படையினர் கால்நடையாக ரோந்து நடவடிக்கைகளை நானாட்டான் முகாமிலிருந்து நறுவிலிக்குளமாதிரிமுகாமை நோக்கி மேற்கொண்டனர்.
இப்படையினரின் ரோந்து நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் வேவு அணிகள் மன்னார் மாவட்டத் தளபதிகளுக்குத் தெரியப்படுத்தினார்கள். தளபதிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாகத் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது .அதற்கமைவாக விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான பகுதியான வஞ்சியன்குளம் என்னுமிடத்தில் ரோந்து வரும் இலங்கைப் படைகள் மீது ஒரு பதுங்கித்தாக்குதல் நடாத்துவதென முடிவெடுக்கப்பட்டது. வேவுத்தகவல்களின்படி அறுபது படையினர் வருவதாக வேவுவீரர்கள் தளபதி சுபன் அவர்களுக்கு சொன்னார்கள் .

தளபதி சுபன் அவர்கள் எதிரியைப் பலவீனமாகக் கருதக்கூடாது என்ற எமது தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக ஒரு இராணுவத்திற்கு மூன்று விடுதலைப்புலிகள் என நுற்றிஎன்பது சிறப்புப்பயிற்சிபெற்ற போராளிகளைத் தெரிவுசெய்து இதில் ஒரு இராணுவமும் தப்பக்கூடாது என தெளிவாகவும் உறுதியோடும் கூறி அணிகளை வழியனுப்பினார். பெருவெளியான அந்தவயல் நிலப்பரப்பில் இயன்றளவுக்கு உருமறைத்து தாக்குதலணிகள் நிலையெடுத்திருந்தது. தாக்குதல் திட்டத்தின்படி 29.04.1991 அன்று காலை பதினொருமணியளவில் ஆரம்பித்த சமர் சில நிமிடங்களே நீடித்தது .இத்தீரமிகு மின்னல்வேக அதிரடித்தாக்ககுலில் ரோந்து வந்த அறுபது படையினரும் கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்த அனைத்து அதிநவீன ஆயுதங்களும் அதிநவீன தொலைத்தொடர்புக்கருவிகளும் கைப்பப்பற்றப்பட்டன.
இவ்வெற்றிகர அதிரடித்தாக்குதலை களத்தில் தளபதி லக்ஸ்மன் அவர்கள் வழிநாடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி சுபன் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தினார்.

இவ்வெற்றிகரத்தாக்குதலில் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
இத்தாக்குதலின் மூலம் இலங்கைப்படைகளின் பாரிய இராணுவமுகாம் அமைக்கும் பணிகளும் கைவிடப்பட்டது. தமிழீழத்தில் மிகப்பெரிய அளவில் ரோந்து உலாவந்த சிங்களப்படையணி ஒன்றின்மீது தாக்குதல் நடாத்தி அப்படையணி முற்றாக அழிக்கப்பட்டதாக்குதலாகவும் இத்தாக்குதல் அமைந்தது. என்ன நடந்தது என்பதை திரும்பிப் போய் சொல்வதற்க்குக்கூட ஒருவரும் மிஞ்சவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தாக்குதலில் மன்னார் மாவட்டப்படையணிகளுடன் பொன்னம்மான் படையணியும் ( பப்பா அல்பா )பங்குபற்றியது.
இவ்வீரமிகு தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகள் விபரம் வருமாறு….
வீரவேங்கை ..றோஐன்.
முருகேசு.இராஐகிருஸ்ணன்.
2ம்லெப்..கோணேஸ்.
பிரான்சிஸ் சிவகுமார்.
எழுத்துருவாக்கம்…சு.குணா.