யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐ றோட் திட்டத்தின் கீழ் பல வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் ஒரு சில வீதிகளில் குறிப்பாக பிறவுண் வீதி மற்றும் ரக்கா வீதி போன்றவற்றின் புனரமைப்பு தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் சில பத்திரிக்கைகள் அவ் வீதிகளில் அமைக்கப்படுகின்ற வெள்ள வடிகால், வீதியின் அகலம் போன்ற சில குறைபாடுகளை; சுட்டிக்காடியிருந்த நிலையில் குறித்த வீதிகளுக்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இவ் வீதிப்புனரமைப்பில் தொடர்புடைய அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

மேற்கூறிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டிய மாநகர முதல்வர் இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வீதி புனரைப்பு வேலைகளை துரித்தப்படுத்துமாறு பணித்தார். அத்துடன் பிறவுண் வீதியானது பல மாதகாலமாக புனரமைப்பு வேலைகள் தொடர்கின்ற நிலையில் மக்கள் மிகுந்த அசௌரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். எனவே இவ் வீதி வேலைகளைக் வேகப்படுத்தி தார்படுக்கையினை (காப்ற்) விரைவாக இடுவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

மாநகர முதல்வர் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிர்வத்தி செய்து மிக விரைவாக குறித்த வீதிகளின் புனைரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக வீதி ஒப்பந்தகார மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உறுதியளித்தனர்.

மாநகர முதல்வருடனான இக் களவிஜயத்தின் போது மாநகர பொறியியலாளர், ஐ றோட் திட்ட அதிகாரிகள் , வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியிலாளர்கள், மற்றும் ஒப்பந்தகாரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




