1990.06 .மாதம் நடுப்பகுதியில் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியதும் இலங்கை அரசஇயந்திரம் முழுப்படைப்பலத்தையும தமிழீழமக்களுக்கெதிராக முழுவீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது.
இவைகளுக்கெதிராக விடுதலைப்புலிகளும் கடுமையாக போரிட்டுக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இலங்கை இராணுவமுகாம்களில ஒன்றான திருகோணமலை மாவட்டம் முதூர் நகர் பகுதியில் அமைந்திருந்த இராணுவமுகாமும் ஒன்றாகும்.இம்முகாமில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் இருந்தனர்.இதை இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததும் விடுதலைப்புலிகள் தங்களது முற்றுகைக்குள் கொண்டுவந்தனர்.இம்முகாம் கப்டன்.பேனாட் அவர்கள் மற்றும் மேஐர்.பவான் அவர்கள் தலைமையிலான போராளிகள் இலங்கைப்படைகளை வெளியேறாத வண்ணம் ஒருமுற்றுகைக்குள் வைத்திருந்தனர்.இப்படைமுகாமில் உள்ளவர்களுக்கு ஆதரவாகவும் இம்முகாமில் உள்ளவர்களை மீட்பதற்காகவும்.பல்வேறு கடல்வழிமூலம் தரையிறக்க முயற்சிகளை இலங்கைஇராணுவம் மேற்கொண்டது. இருந்தாலும் விடுதலைப்புலிவீரர்களின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அம்முயற்சிகளிலிருந்து பின்வாங்கியது இலங்கை முப்படைகள்.இருந்தாலும் 14.06.1990 அன்று இரவு திருகோணமலைமாவட்டம் முற்றுகைக்குள்ன முகாமிலிருந்து சுமார் ஆறுகிலேமீற்றர் தூரத்திலிலுள்ள இலக்கந்தை என்னுமிடத்தில் நள்ளிரவில் இங்கைஇராணுவத்தின் அதிசிறப்புப்காட்டுபபயிற்சி பெற்ற எண்பத்திமூன்று பேரைக்கொணட சிறப்பு அணிகளை தரையிறக்கியது.

தரையிறங்கிய படைகள் மெதுமெதுவாக முதூர் நகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் முற்றுகைக்குட்பட்ட இராணுவமுகாமை நோக்கி நகர்ந்து வந்தனர் .இப்படை நகர்வை விடுதலைப்புலிகளின் வேவுவீரர்கள் அப்பகுதிக் பொறுப்பாளாரான பேனாட் அவர்களுக்குத் தெரிவித்தனர். பேனாட் அவர்களோ அணிகளை ஒருங்கினைத்து விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான பகுதியான கட்டைப்பறிச்சான் பாலத்திற்க்கு அண்மையாக வழிமறித்து ஒருபாரிய வீராவேசத்துடன் இருந்த சிறிய அணிகளையும் ஒருங்கினைத்து தாக்கினார்கள்.இச்சமர் 15.06.1990 அன்று காலை ஒன்பதுமணியளவிலிருந்து மாலை மூன்றுமணிவரை நீடித்தது.இத்தீரமிகு தாக்குதலில் தரையிறங்கிய சிறப்புப்படையணிகளில் நாற்பதிற்க்கும் மேற்பட்டபடையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.எஞ்சிய படையினரை கலைத்துச் சென்ற விடுதலைப் புலிகள் மீது விமானப்படையினரின் மூர்கத்தனமான தாக்குதல் நடாத்தி பாதுகாப்பு வழங்க கடற்படையினரின் படகுகளில் ஏறி தப்பியோடினர்.
இவ்வீரம் செறிந்த சமரில்

மேஐர்.பவான் வீரச்சாவு.(03.07.1990.)அவர்கள் கப்டன் .குட்டி அவர்கள்.வீரச்சாவு.(17.06.1990) மேஐர்.வெற்றிச்செல்வன்.அவர்கள்.வீரச்சாவு.

(09.06.1992)மேஐர் .வினோத்.அவர்கள்.(வீரச்சாவு.
லெப்.நிமால்.அவர்கள்.வீரச்சாவு.(30.06.1991.).ஆகியோர். தலைமையிலான அணிகள் இச்சமரில் தத்தம் பகுதிகளை இராணுவம் வந்துவிடக்கூடாது என்கிற நிலையில் தலைவனை மனதில் நிலைநிறுத்தி கடுமையாகப் போரிட்டு இவ்வெற்றிகர நடவடிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்தார்கள்.இவ்வெற்றிகர தாக்குதலில் வீரவேங்கை ஜெகன் அவர்கள் வீரவேங்கை .டங்கா அவர்கள் வீரச்சாவடைந்தார்.இவ்வெற்றிகர நடவடிக்கைகளை கப்டன்.பேனாட் அவர்கள். (வீரச்சாவு.01.09.1990)செவ்வனவே வழிநாடாத்தியிருந்தார்.இத்தாக்குதல்களில் வீரமிக்க போராளிகள் சுமார் அறுபதுபேர்கள் தான் இருந்தார்கள்.
எப்படைவரினும் எமது வீரச்சாவடைந்த உடலைத் தாண்டிதான் வரவேண்டும் என்ற ஒவ்வொரு போரளியின் உணர்வாலேதான் இவ்வெற்றி தலைநர்ப்போராளிகளுக்குச்சாத்தியமாகிற்று.
எழுத்துருவாக்கம்…சு.குணா.
கப்டன் பேனாட்
காளிக்குட்டி இரத்தினசபாபதி
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை.