பாரிசின் புறநகரப் பகுதியான திறான்சி 93 பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று 15.05.2021 (சனிக்கிழமை) மே 18 கவனயீர்ப்பும், வணக்க நிகழ்வும் நடைபெற்றன.
நிகழ்வில் மாநகரசபை சார்பாக துணை முதல்வர் Mme MALANGILA LEBO ( Adjointe au Maire) கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார், இவருடன் திறான்சி மாநகரசபை ஆலோசகர் திரு.அலன் ஆனந்தனும் சுடர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் 2ம் லெப் மரியாவின் சகோதரன் திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்க உப பொறுப்பாளர், ஏற்றிவைத்தார் 2ம் லெப். காண்டீபனின் சகோதரி மலர்வணக்கம் செலுத்திய பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், துணைப் பொறுப்பாளர் திரு. சஞ்சீவன், அரசியல்துறை திரு . பாலகுமாரன், பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா மற்றும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர் ஒருங்கிணைப்பு பிரதிநிதிகள், இளையோர் அமைப்பு , தமிழ் உறவுகள், பெரியவர்கள், குழந்தைகள் , ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். சிறிது நேரம் காலநிலைமாற்றத்தால் எதிர்பாராத விதமாக சில மணிநேரம் பனிக்கட்டி மழைபெய்திருந்த போதும் மாநகர முன்றலில் தமிழின அழிப்பு சம்பந்தமான பதாதைகள் கட்டப்பட்டதுடன், பல பிரெஞ்சு மக்கள், பல்லின மக்கள் இதன் நோக்கம் பற்றிக் கேட்டறிந்ததுடன் எமது துண்டுப் பிரசுரங்களை கேட்டு வாங்கிச்சென்றனர். பிற்பகல் 15.00 மணி தொடக்கம் 17 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.













