பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது. 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன்

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். விவேக்கின் மனைவியும் மகளும் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும்

கரியாலை நாகபடுவானில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் பிரதேசத்தின் குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்

தமிழீழ மக்களிற்கு அளப்பரிய சேவையாற்றிய திரு.இராசையா யயீந்திரா. மருத்துவர் (அருள்/றோசான்) காலமானார்

முல்லைத்தீவு நகரை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.இராசையா யயீந்திரா.மருத்துவர் (அருள்/றோசான்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காலமானானார். அன்னாாின் பூதவுடல் மாஞ்சோலை வீதி,முள்ளியவளை, முல்லைத்தீவில் உள்ள அன்னாாின் சகோதரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்

வீரவேங்கை அன்பு
சுதுமலைப் பகுதியில் நண்பர்களுடன் உணவருந்தும்போது, எதிர்பாராது கைக்குண்டு கழன்றுவிட, அந்நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக குண்டை தனது வயிறோடு அணைத்து வீரகாவியமான மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும்.

ஓ எம் தோழா உன் அன்பான நடத்தையால் உனக்கு அன்பாக நாமிட்ட பெயர் அன்பு. உன்னை இழந்தோம். எம் அன்பை இழந்தோம். அன்பு என்ற பெயரைக் கேட்டு சிலர் உன்னை சிறுவன் என்றோ மிருதுவான தோற்றமுடையவன் என்றோ நினைக்கலாம். 6 அடிக்கும் கூடிய உனது உயர்ந்த தோற்றத்தையும், தினவெடுத்த திரண்ட தோள்களையும் எம்மால் என்றும் மறக்கமுடியாது.உன்னால் பயிற்றப்பட்ட எம் இளைஞர்கள் நீ இறந்த செய்தி கேட்டு உன்மீது கொண்ட அன்பால் அவர்கள் அடைந்த துயர் சொல்லமுடியாது. உன் வீரம் செறிந்த தியாக வரலாறு ஒவ்வொரு மக்களும் அறியவேண்டியது.

மேலும்

வேலன் சுவாமிகளை பொது வேட்பாளராக ஏற்கமுடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில்.

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் பொது முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமிகளை நிறுத்தலாமென க.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பது அவரது சொந்தக்கருத்து. எனினும், வடக்கு-கிழக்கில் நிர்வாக ஆளுமையும், நடைமுறை அரசியலை கையாள தெரிந்த ஒருவருமே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும்

புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது லெப் கேணல் கருணாவீரச்சாவு

இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின்நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது

மேலும்

சுவிற்சர்லாந்து புதிய தளர்வினை 19. 04. 2021 முதல் அறிவித்துள்ளது.

ழேத்திருநாள் கீழறை ஆண்டுபிறந்திருக்கும் இந்நாளில் (14.04.21) சுவிற்சர்லாந்து அரசு தனது புதிய மகுடநுண்ணி தளர்வினை அறிவித்துள்ளது.  இதன்படி 19. 04. 2021 முதல் இப்புதுத் தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ளன:

மேலும்

14.04.1985.அன்று தமிழகம் செல்கையில் தமிழீழக்கடற்பரப்பில் வீரச்சாவடைந்தனர்.

14.04.1985.அன்று தமிழகம் செல்கையில் தமிழீழக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளபபட்ட தாக்குதலின் போது வீரச்சாவடைந்தனர்.

மேலும்

மக்கள் கவனத்தை திசை திருப்பவே யாழ். மேயர் கைது – அரசை சாடுகின்றார் சஜித் பிரேமதாஸ.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமையானது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடனான ஒரு செயற்பாடு” என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். “யாழ் மேயரை பயங்கரவாதி என முத்திரை குத்துவதன் மூலமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி குறித்த விசாரணையை அரசாங்கம் நிறுத்திவிட்டது” எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

மேலும்

தமிழீழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக அதுவும் பட்டப்பகலில் 28.02.1992 அன்று ஆழ்கடலில் கடற்படையின்கடற்படைக்
கலத்தை வழிமறித்து தாக்கிய கடற்புலிகள்.

யாழ்மாவட்டம் வெற்றிலைக்கேணியில்நிலைகொணடிருந்த படையினருக்குத் பாதுகாப்பு வழங்குவதற்காக என்கிறபோர்வையில் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து வெற்றிலைக்கேணிக்குமான இடைப்பட்ட பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையின் கரையோர ரோந்துக்கலமான சவட்டன் ஈடுபட்டுககொண்டிருந்தது.

மேலும்