யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்Day: April 29, 2021
30.04.21 முதல் சுவிசின் பழையபணத்தாள்கள் கட்டணவழங்கீடாகச் செல்லாது!
1995 முதல் 1998 வரை வெளியிடப்பட்ட சுவிற்சர்லாந்துப் பணத்தாள்கள் கட்டணவழங்கீடாக 30. 04. 21 வெள்ளிக்கிழமை முதல் செல்லாது என சுவிற்சர்லாந்தின் தேசயி வங்கி அறிவித்துள்ளது.
மேலும்கோடைகாலத்தில் மாற்றம் எதிர்பார்க்கலாம்
சுவிற்சர்லாந்தின் நடுவனரசு 28. 04. 21 புதன்கிழமை தமது மகுடநுண்ணி (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கையின் தளர்வு தொடர்பாக புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் அறிவித்தது. சுவிஸ் நாட்டின் அதிபர் குய் பார்மெலின் தனது உரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பினை தொடங்கினார்:
மேலும்