28.03.2021 கிட்டு பூங்கா நுழைவாயிலுக்கு தீ வைப்பு நல்லூர் கிட்டுப் பூங்காவின் நுழைவாயில் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
மேலும்Day: March 28, 2021
ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்க்கு எதிராக யேர்மனியில் இன்று பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்க்கு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிராக யேர்மனியில் பல்வேறு அமைப்புகள் இன்று ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
மேலும்ஆஸ்திரேலியா நாட்டில் தமிழர் போராட்டங்களை முன்னெடுக்கும் 16 வயது தமிழ் சிறுமி.
ஆஸ்திரேலியாவில் பதினொரு வருடங்களாக தமிழர் ஒருவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழீழம் விடுதலை அடைய வேண்டும் எனவும் தமிழர்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலியாவின் பல பாகங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறார் Renuga Inpakumar றேணுகா இன்பகுமார் என்ற ஆஸ்திரேலியாவில் பிறந்த 16 வயது தமிழ் சிறுமி.
மேலும்புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது . இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது .
மேலும்