Read Time:1 Minute, 12 Second
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் கடந்த இரண்டு நாளாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் அங்கு சென்று ஆதரவு வழங்கியிருந்தனர். அதனை தொடர்ந்து இன்றைய தினம் அங்கு சென்ற தொல்பொருள் திணைக்கள ஊழியர்களை உள்நுளைய விடாமல் மக்கள் விரட்டியுள்ளனர்.
அங்கு பொலிசாரும் சென்று இவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர் அதனை மக்கள் பொருட்படுத்தாமல் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் தாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை நாட உள்ளதாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

