இன்று காலை மனித உரிமைகள் ஆணையாளர் வதிவிடத்திற்கு முன்னர் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் எமது தமிழின அழிப்பின் சான்றுகள் தாங்கிய பதாகைகளோடு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும்,தமிழீழமே எமக்கான தீர்வு என… கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆணையாளர் வதிவிடத்தில் எமது நியாயமான கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்(ஐ.நா முன்றலில்) இனவழிப்பு சான்றுகளை காட்சிப்படுத்தியவாறு உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இன்றைய போராட்டத்தில் சுவிசு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு கொலம்பசண்ணையோடு சுவிசு வாழ்மக்களும் கலந்து கொண்டனர்.
நாளைய தினம் 23.02.2021 தொடரவிருக்கும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் அறவழி மனித நேய செயற்பாட்டாளர்களை ஈகைப்பெரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றல்) ஆசிய பசிவிக் குழுவின் அதிகாரி நேரில் சந்திக்க உள்ளார். மற்றும் எமது அறவழிப்போராட்டத்திற்கு ஆதரவளித்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழின அழிப்பிற்கு நீதி கிடைக்க தம்மால் ஆன உதவியினையும் அதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்வதாக “L’avenir.be” எனும் பெல்சிய பிரஞ்சு ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.
“எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்”
- தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.















