தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டின் பதிவு

0 0
Read Time:2 Minute, 17 Second

தமிழகத் தமிழீழ ஆதரவாளர்களே, உலகத் தமிழ்ச் சொந்தங்களே, தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டில், உலகங்கும் அரசியல்வாதிகள் நம்மோடு இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.

அனைவரின் பதிவுகளையும் தொகுத்து முழுக் காணொலியாக உருவாக்கப்பட்டுள்ளது.
 நாம் செய்ய வேண்டியது என்ன?
 நமக்குத் தெரிந்த ஒரே ஒரு ஊடகவியலாளர், ஒரே ஒரு மனித உரிமை ஆர்வலர், மனித உரிமை அமைப்பு, வழக்கறிஞர், அரசியல்வாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் என குறைந்தது 10 பேருக்கு இக்காணொலியினை அனுப்புவோம். 
என்ன நடக்கும்? 
உலகெங்கும் எம் தமிழினத்திற்கு ஆதரவான குரல் ஒலிக்கிறது என்ற தகவல்கள் தமிழர்களிடையே புது நம்பிக்கை கொடுக்கும். மறந்துவிட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவூட்டும். மனித உரிமை ஆர்வலர்களின் மனசாட்சி தட்டியெழுப்பபடும். கல்வியாளர், மாணவச் சமூகத்தில் ஒருவருக்குச் சென்றாலும் 100 பேருக்கு பகிரக்கப்படும். அரசியல்வாதிகளுக்கு தன் கடமையை நினைவூட்டும். ஆம், மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும். 
பகிரப்படும்பொழுது குறைந்தது ஒரே ஒரு தமிழ்ப்பேசாத நண்பர், உடன் பணிபுரிபுவர், உடன் பயில்பவர், ஊடகவியலாளரையும் இணைத்துக் கொள்ளுங்கள்…. 
கருத்தாயுதமாக மாற்றுவோம். அடுத்த ஆண்டு, உலகெங்கும் இன்னும் ஆழமான ஆதரவுக் குரலைப் பெருக்க இந்த ஆண்டு முழுவதும் திட்டமிட்டு உழைப்போம்…….வாருங்கள் ஒன்றாக இணைவோம்…நீதிக்கான போராட்டத்தைத் தொடர்வோம். 
– முனைவர் விஜய் அசோகன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment