அரசியல் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர்களுக்கு நீதி வேண்டி கோரிக்கை

0 0
Read Time:3 Minute, 53 Second

பிரான்சில் அரசியல் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர்களின் பிரிதிநிதி திரு.நடராஜா மதீந்திரனின் படுகொலைக்கு நீதி வேண்டும் என பிரான்சு உள்துறை அமைச்சுக்கும், நீதி அமைச்சுக்கும் தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்ஸ் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் பாரம்பரிய வலையமைப்பு-பிரான்ஸ் சங்கம் உங்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது.

பிரான்ஸில் ஈழத் தமிழ் மக்களின் தலைஅனைத்து ஊடகங்களுக்கும்.வராகவிருந்த திரு.நடராஜா மதிந்திரன் (பரிதி) அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கவும், அவரது படுகொலை வழக்கை பிரான்ஸ் அரசு மீண்டும் விசாரிக்கவும் கோரிக்கையை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் பண்பாட்டு வலையம்-பிரான்ஸ் சார்வும் பிரான்ஸின் நீதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிரிடம் கடதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9, 2012 அன்று, பிரான்சில் தமிழ் மக்களின் தலைவரான நடராஜா மதீந்திரன், பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் Rue des Pyrénées இல் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரான்சில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்த நடராஜா மதீந்திரன் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழே பிரான்ஸில் அரசியல் படுகொலை செய்யப்பட்டார்.

நடராஜா மதீந்திரனின் கொலைக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவரது கொலையில் சந்தேக நபர்களை பிரெஞ்சு போலீசார் கைது செய்தனர், ஆனால் அவர்கள் சில காலங்களிலேயே விடுதலைசெய்யப்பட்டனர்.

நடராஜா மதிந்திரன் படுகொலை வழக்கை பிரான்ஸ் அரசு எடுத்து புதிய விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

நடராஜா மதிந்திரன் பிரான்சில் வாழும் 450,000 ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். பிரான்சில் இதுவரை மூன்று தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த மூன்று பேரின் கொலைகளுக்கும் நீதி கிடைக்காதது கவலை அளிக்கிறது.

தமிழ் மக்களின் இந்தக் கோரிக்கையை பிரான்ஸ் அரசாங்கமும், பிரான்ஸ் அரசாங்கத்தின் நீதித்துறையும் ஏற்று நடராஜா மதீந்திரன் படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிரான்சில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய அரசியல் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவது பிரான்ஸ் அரசின் கடமை என்பதோடு பிரான்சில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழர்களின் பாதுகாப்பையும் பிரான்ஸ் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment