தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம்.

0 0
Read Time:3 Minute, 12 Second

31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி, ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது. அந்தவகையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேவையின் 54வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், எமது நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம் இன்று(02.09.2023) நெதர்லாந்தின் ஊடாக பயணித்து றொட்டாம் மாநகரிலிருந்து காலை அகவணக்கத்துடன் ஆரம்பித்து, மக்கள் பேராதரவோடு எழுச்சிப் பயணத்தினை தொடர்ந்து மாலை பிறேடா மாநிலத்தில் நிறைந்துள்ளது.இப்பயணம் பெல்சியம் நாட்டின் எல்லையினை அண்மித்துக்கொண்டு இருக்கின்றது.
இன்று ரொத்தடாம் மாநகரசபை மனுக்கையளிக்கப்பட்டு ,ஈருருளிப்பயணம் நடைபெற்றிருந்தது.மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டத்தில் கலந்துகொண்டு மனித நேய செயற்பாட்டாளர்களுக்கு மக்கள் ஒன்றிணைந்து எழுச்சியோடு வரவேற்கவேண்டுமென உரிமையோடு அழைக்கிறோம்.

எதிர்வரும் 54 வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலே வாழிட நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்னும் நிலைப்பாட்டினை ஏற்க நாம் அயராது போராட வேண்டும், அதற்கமைய எம் உறவுகளே உங்களுடைய வாழிட நாடுகளை எமது நியாயமான கோரிக்கை செவிசாய்க்க வைப்பது எம் அனைவரினதும் வரலாற்று கடமையாகும் எனவே எம் விடுதலைப் பங்களிப்பினை ஆற்ற வாருங்கள்.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”

  • தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment