சுட்டது பழமா…?

0 0
Read Time:1 Minute, 27 Second

சுட்டது பழமல்ல
ஒட்டிக் கொண்டது மணல்தான்,
தெரிந்தும், ஊதிப்
பெருப்பித்ததுதான் மிச்சம்…

சுடச்சுடத் தணலில் வெந்தததனால்
சட்டி சுட்டதுபோலும்
சுட்டதை விடத்துணியாமல் மீள, மீளக்
கை சுட்டதுதான் மிச்சம்…

கச்சைக்குத் துணியவசியம்
கட்டித்திரியும் வேட்டி மிகக்கவனம்…
பட்டுக்குஞ்ச நினைப்பெல்லாம்
அதற்குப் பிறகுதான்…

வெட்டிக்கு வார்த்தை யாலங்கள்
வெடுக்குநாறிவரை எவனோ ஒருவன்
துட்டுக்குக் கூவுவதால்
துளியளவும் துன்பம்போகா…

கற்றதை ஒழுகும்வரைதான்
வாழ்வுக்குப் புதுவெளிச்சம்,
கற்றது கைமண்ணளவு
கல்லாததையும் அறிந்தொழுகு!

‘தமிழ்த்தேசிய’ முயற்சி
போட்டி நிகழ்ச்சியல்ல மாறாக
அது ஒரு கூட்டு முயற்சி
‘தமிழ்த்தேசிய’ எழுச்சி
விற்பனைப் பண்டமல்ல
அது ஒரு விடுதலைப் பிரவாகம்…

எழுக மக்காள் எழுநிலை பெறுக!
எழுந்துநின்றும் தலைவிதியெழுத
அழுத பொழுதுகள் அகன்று செல்ல
அறத்தின் நீதியை அடைந்து வெல்க!
* -காந்தள்-*

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment