தமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்-ஐநாவில் கஜேந்திரகுமார் கேள்வி!

0 0
Read Time:3 Minute, 35 Second

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 52வது அமர்வில், விடயம் 8 தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
30.03.2023 இன்று ஜெனீவா நேரம் 10.20 மணியளவில் ஆற்றிய உரை 2

தலைவர் அவர்களே,

திட்டச் செயற்பாட்டுக்கான வியன்னா 66ம் பிரகடனத்தின் (Vienna Declaration and Programme of Action), இரண்டாவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“எல்லா மக்களும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். இந்நெறிமுறைகளின்படி, தமது அரசியல் நிலைப்பாட்டையும், பொருண்மியம் மற்றும் சமூக கலாச்சார விடயங்களையும் மேற்கொள்ளும் வழிவகைகளைத் தீர்மானிக்கும் உரித்துடையவர்களாக அவர்கள் இருப்பர்”

அப்பிரகடனத்தில், மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பது மனிதவுரிமை மீறலாகவும், அவர்களது உரிமையினை முறைப்படி நிலைநாட்டுவதனை மறுதலிக்கும் செயல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில்- தமிழர்கள் ஒரு தேசமாக, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய அனைத்துத் தகைமைகளையும் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்மக்கள் தமது பொருண்மிய, சமூக, கலாசார மேம்பாட்டை மேற்கொள்வதற்கான உரிமையை, தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் மறுத்துவந்த காரணத்தாலும், தமிழ் மக்களது இருப்புக்கு ஆபத்து உருவாகி வந்ததனாலும், 1977ம் ஆண்டு, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தனிநாட்டினை அமைப்பதற்கு ஆதரவு வழங்கி, ஜனநாயக ரீதியில் பெருந்திரளாக வாக்களித்தார்கள்.

அதன்பின்னர், சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பில் கொண்டு வந்த 6வது திருத்தத்தின் அடிப்படையில், தனிநாடு கோருவதனை சட்டவிரோதமான செயலாக ஆக்கியுள்ளது. நடைமுறையில் இவ்விடயம் தவறாக வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையிலிருக்கின்ற, மத்தியில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் ஒற்றையாட்சி முறையிலான அரசியலமைப்பிலிருந்து, அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுவதனைக் கூட, பிரிவினைவாதமாகப் பார்க்கப்படும் நிலையே காணப்படுகிறது.
இதன் விளைவாக- தமது அரசியல் நிலைபாடு தொடர்பில் காத்திரமான உரையாடலுக்கான வெளி, தமிழ்மக்களுக்கு மறுக்கப்படுகிறது.

தலைவர் அவர்களே,

தமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment