பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவரின் நிலையுடன் கூடிய சுற்றுவட்டத்தினை அமைக்க உதவிய அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

0 0
Read Time:5 Minute, 10 Second

எமது தூய நகரம் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட அனைத்து சுற்றுவட்டங்களையும் அழகுபடுத்துவது தொடர்பில் சுற்றுவட்டாரங்கள் அனைத்துக்கும் நகர வடிவமைப்பாளர்களைக் கொண்டு திட்ட வரைபுகளை வடிவமைத்திருந்தேன்.

அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி புனரமைப்பின் போது சத்திரச்சந்தியில் (சிக்னல் லைட் சந்தி) காணப்பட்ட திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு அது யாழ்.பொது நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் யாழ்.மாநகர எல்லைக்குள் நிறுவ வேண்டும் என்பதன் அடிப்படையில் அதனை யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்திற்கு முன்னாகவுள்ள சுற்று வட்டத்தில் நிறுவுவது என கடந்த வருடம் முற்பகுதியில் எமது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நிறுவுவதற்கு ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திலகராஜின் நிதிப் பங்களிப்பை கோரினேன். குறித்த சுற்று வட்டத்தினை நிர்மானித்து அழகுபடுத்தப்பட்டு சுற்று வட்டத்தின் நடுவே திரவள்ளுவரினை பிரதிஷ்டை செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி நடைபெற்றது.

அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எழுந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த செயற்றிட்டம் உடன் ஆரம்பிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இந் நிலையில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட சுற்றுவட்டத்தில் சில மாற்றங்களை செய்து மிகுந்த பிரயத்தனத்திற்கு மத்தியில் சுற்றுவட்டத்தினை மீளமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பமானது.

இச் சுற்றுவட்டத்திற்கான புதிய திருவள்ளுவர் சிலையினை இலவசமாக பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்தியாவிலுள்ள வி.ஜீ.பி எனப்படும் உலக தமிழ்ச் சங்கத்திற்கு கடந்த 15.08.2022 அன்று திருவள்ளுவர் சிலை ஒன்றினை எமக்கு அன்பளிப்புச் செய்யுமாறு என்னால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அவர்களும் இத்திருவள்ளுவர் சிலையினை அன்பளிப்புச் செய்தனர்.
பலரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் இன்று இச் சுற்றுவட்டம் அழகியமுறையில் அமைக்கப்பெற்று அதன் நடுவே உலகப் பொதுமறை நூலான திருக்குறளினை இயற்றிய திருவள்ளுவரின் சிலை பிரதிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

காலத்தினால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க திரையில் பார்த்ததை நிஜத்தில் பார்பதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டிய கடமைப்பாடு எனகுள்ளது என்பதன் அடிப்படையில் இச் சுற்றுவட்டத்தினை தனது சொந்த நிதியின் ஊடாக அழகுற அமைத்து தந்த ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திலகராஜ் அவர்களுக்கும் திருவள்ளுவர் சிலையினை கேட்டவுடன் எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் அன்பளிப்புச் செய்த வி.யி.பி உலக தமிழ் சங்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் இச் சுற்றுவட்டத்தினை அழகுற வடிவமைத்து தந்த வடிவமைப்பாளர்கள், இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கௌரவ உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாநகர ஆணையளார் அவர்களுக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, இத் திட்டத்தில் பணியாற்றிய யாழ்.மாநகர பணியாளர்கள் அவைருக்கும் அங்குரார்பண நிகழ்வினை ஒழுங்கு படுத்திய ரில்கோ ஹொட்டல் நிர்வகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

விஸ்வலிங்கம் மணிவண்ணன்
முன்னாள் முதல்வர், யாழ்.மாநகர சபை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment