தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி சுவிசு நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் அறவழிப்போராட்டம்.

0 0
Read Time:1 Minute, 58 Second

மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டமானது கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்து நெதர்லாந்து , பெல்சியம், லுக்சாம்பூர்க் , யேர்மனி, பிரான்சு நாடுகள் ஊடாக சுவிசு நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

இன்று 03/03/2022, 16ம் நாளாக பாசல் மாநகரத்தில் இருந்து சொலொத்தூர்ன் மாநகரத்தினை வந்தடைந்தது. சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தீர்வு என்பதனை வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மனு மாநகரசபையில் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரும் வழியில் தமிழீழ உறவுகள் சுடுபானாம்,நீர் , உணவுகள் போன்றவற்றை அன்போடு பகிர்ந்து அறவழிப்போராட்டத்திற்கான ஆதரவுகளை வளங்கியிருந்தனர்.

நாளையதினம் பேர்ன் பாராளுமன்றத்தினை மு.ப 11 மணிக்கு சென்றடைகிறது. அதனைத்தொடர்ந்து பி.ப 3:30 மணிக்கு பிறிபோர்க் மாநகரசபையில் மக்கள் சந்திபு நடைபெறும் சம நேரத்தில் மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

« எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்தநாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும் »

  • தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment