ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள் – 12.02.2022 சுவிஸ்

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின்13ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!

மேலும்

நினைவெழுச்சி நாள் – 12.02.2022 சுவிஸ்

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின்…17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்.

மேலும்

பயங்கரவாதச் சட்டத்தில் இருந்து விடுபட, ஜிஎஸ்பி பிளஸைப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறோம்

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் எங்களின் குழந்தைகளைக் கண்டுபிடிக்கக் கோரி நாம் நடத்தி வரும் போராட்டத்தின் 1812வது நாள் இன்று.

மேலும்

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கரம், சதுரங்கப்போட்டிகள்!

பிரான்சு நாடு இதுவரை கோவிட்19 இன் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் படி மக்களுக்கு பணிக்கப்பட்டதன் பிரகாரம் பல பொதுநிகழ்வுகள் தடைப்பட்டதுடன் நடாத்த முடியாது போயிருந்தமையும் படிப்படியாக அதன் தளர்வுகள் மக்களை இயல்புவாழ்க்கைக்கு கொண்டு செல்கின்ற நிலையில் பெப்ரவரி 2 ஆம் திகதி கூடுதலான தளர்வுகள் அரசினாலும், சுகாதார அமைச்சாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

22 முதல் சுவிசில் புதிய தளர்வுகள்

வீட்டில் இருந்தபடி பணிசெய்ய வாய்ப்புள்ளோருக்கு (Homeoffice), வீட்டில் இருந்தபடி பணியாற்றப் பணிக்கப்பட்ட ஆணை சுவிசரசால் நீக்கப்படுகின்றது. அதுபோல் 17. 02. 2022 முதல் தடுப்பூசி சான்று மற்றும் சுகாதார முகவுறை அணியும் கட்டாயத்தில் இருந்து விடுப்பு அறிவிக்கப்படலாம்.

மேலும்

சிங்கள தேசத்தின் சுதந்திர நாளும் – தமிழீழ தேசத்தின் கரி நாளும்!

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! புரட்சிகர வணக்கம் 01.02.2022இலங்கைத் தீவு அந்நியரின் ஆட்சிப்பிடியில் இருந்து விடுதலைக்காக அதிகம் போராடிய தமிழ்மக்கள், சுதந்திர இலங்கையில் புறக்கணிக்கப்படத் தொடங்கியவேளை, அதற்கெதிராக இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக புறக்கணித்து முதன் முதலில் 1956 இல் தமிழரசுக் கட்சியினர் அறிவித்தனர். திருகோணமலையில் நடராசன் என்ற தமிழ்விடுதலை உணர்வாளர், அப்பகுதியில் உள்ள அரச கச்சேரியில் பறந்த இலங்கைத் தேசியக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியை பறக்கவிட்ட போது சிங்கள காவல்துறையால் 04.பெப்ரவரி 1956 இல் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றுடன் 66 ஆவது நினைவு ஆண்டாகியுள்ளது. சிங்கள சுதந்திரத்தின் 74 ஆவது ஆண்டுகளாகிய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு இருந்ததோ, அதே நிலைப்பாட்டிலேயே தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

மேலும்