தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 12 வது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்.

27.02.2002 இன்று ஆரம்பித்த ஈருருளிப்பயணம் Baden என்னும் மாநகரத்தில் நிறைவுற்றது. பயணித்த வழியில் Karlsuher மாநகரத்தில் தமிழ் மக்களின் வரவேற்போடு தொடர்ந்தும் இலக்கு நோக்கி பயணித்தது. யேர்மனி நாட்டு பெண் ஒருவரினால் நீர் ஆகாரம் பகிர்ந்து தமிழர்களுக்கு நடந்த அழிப்புப் பற்றி கேட்டறிந்து தமிழீழத் தேசியக் கொடியினை விருப்போடு பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்

11ம் நாளாக தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்தது.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டது.

மேலும்

பிரான்சில் ‘இளங்கலைமாணி’தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் சாதனை

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியமும், தமிழ் இணையக் கல்விக்கழகம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டப்படிப்பிற்கான தேர்வின் இறுதி நாளான 20/02/2022 இல் பட்டக்கல்வியை நிறைவு செய்த பட்டகர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இதில்

மேலும்

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

இன்று (25/02/2022) காலை 6 மணிக்கு Luxembourg – Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சார்புருக்கன் மாநகரசபையில் உதவி முதல்வரினை சந்தித்து சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனவும் அதற்காக மாநகரசபைகள் யேர்மனிய நாட்டின் வெளிநாட்டமைச்சிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்கப்பட்டது.

மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது.

கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். நெதர்லாந்து , பெல்சியம் மற்றும் லக்சாம்பூர்க் நாடுகளை கடந்து இன்று 24/02/2022 லுக்சம்பூர்க் – யேர்மனி நாட்டின் எல்லையினை வந்தடைந்தது.

மேலும்

பிரான்ஸின் செனட் சபை அங்கத்தவர்களுடன் சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிரான்ஸ் அரசியல் துறையுடன் கதைக்கப்படவேண்டும். சந்திப்பின் விபரம் கீழே இணைத்துள்ளேன்….. சிறிலங்கா, வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர். பீரிஸ் பிரெஞ்ச் குடியரசின் செனட்டர்களுக்கு இலங்கையின் தற்போதய நிலைப்பாட்டைவிளக்கியுள்ளார்.

மேலும்

தயவு செய்து இலங்கையை ஐசிசியிடம் ஒப்படைத்து,ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்புகளை நிறுத்துங்கள்.

வவுனியா கொட்டகையில், கடந்த ஐந்து வருடங்களாக எமது ஆற்றொணா போராட்டத்தை தொடர்கின்ற நாம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள். வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து அரை மைல் தொலைவில் A9 வீதியில் இந்தச் கொட்டகை அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு உணவைத் தவிர்த்து 1833வது நாளாக தொடர்ந்து இரவும் பகலும் இங்கே இருக்கிறோம்.

மேலும்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

பிரித்தானியாவில் இருந்து கடந்த 16.02.2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்தினைக் கடந்து, பெல்சியத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று (23/02/2022) Namur, Belgium மாநகரத்தில் இருந்து Bastogne, Belgium மாநகரத்தினை வந்தடைந்தது , இயற்கை சீற்றத்தின் காரணத்தினால் பல வீதிகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவிய போதும் இப்பயணம் தொடர்ந்தும் இலக்கு நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி செயற்பாடுகளை மேலும் உத்வேகத்துடன் முன்னெடுப்போம்!

இன்று உலகத் தாய்மொழி நாள். உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி எங்கள் செம்மொழியாம் தமிழ்மொழி என்ற சிறப்போடும் மிடுக்கோடும் தமிழராய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.

மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக (21/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக (21/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

மேலும்