தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்.

0 0
Read Time:2 Minute, 8 Second

தமிழீழ மக்களின் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள மாவீரர் துயிலும் இல்லப் பாடலான “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! “என்ற பாடலைப்பாடிய சங்கீத,மிருதங்க கலாவித்தகர் இசைக்கலாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்கள், 25ம் திகதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கனடாவில் காலமானார்.

இவர் தமிழீழத்தின் பல முக்கிய பாடல்கலைப் பாடியுள்ளார். அத்தோடு இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இசைக்கலைஞராக விளங்கி, பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தும் உள்ளார்.

இலங்கையின் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக கனடாவில் குடியேறிய அவர், அங்கு தமிழிசையை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் கனடாவின் பல பகுதிகளில் இசை வகுப்புக்களையும் நடத்திவந்தார்.

இவரது தமிழீழ தாயகப்பாடல்கள் சாகா வரம் பெற்று என்றும் தமிழர்களின் வீடுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
. தன் குரலால் இசையை ஆண்ட அற்புதக் குரலோன்.. உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் என் எம் தேசத்தின் மாவீரச் செல்வங்களின் நினைவு சுமந்த பாடலை தன் குரலால் உரமேற்றிய உணர்வாளன் . தன் தாயகப் பயணத்தை முடித்துக்கொண்டான் . அவர் குலின் தாகம் ஈழத்திற்காய் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பாடகர் வர்ண ராமேஸ்வரனுக்கு இருப்பு ஊடகம் தனது புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment