சிறப்புற நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 25 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் 19.09.2021 அன்று முன்னாள் போராளி சுஜீபன் தலைமையில் நடைபெற்றது.

மேலும்

கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் – பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 27(2) இன் கீழ் நாளை விசேட பிரேரணை – கஜேந்திரகுமார் எம்பி

சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பானஇராஜாங்க அமைச்சர் லெகான் ரத்வத்த அவர்கள், தனது பதவிநிலை அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 12/09/21 அன்று மாலை 6.00 மணியளவில், நிறை போதைக்குள்ளான நிலையிலும்  , அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று  பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் கொண்டுவந்து நிறுத்துமாறு பணித்திருந்தார்.

மேலும்

சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.

48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது.

மேலும்

ஐ.நா முன்றலில் சீரற்ற காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் திரண்ட தமிழ்மக்கள்!!

எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்.

திலீபனுடன் ஏழாம் நாள் இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின……

மேலும்