13ம் நாளாக (14/09/2021)  தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம்.(960Km)

0 0
Read Time:3 Minute, 45 Second

தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசால் கொடூரத்தனமாக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ சுதந்திர தேசமே எமக்கான தீர்வு என பறைசாற்றிக்கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம்,

ஐரோப்பிய ஆலோசனை அவையில் முக்கிய கலந்துரையாடல் ஊடாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை பிரான்சு வலியுறுத்த வேண்டும் என மனித நேய செயற்பாட்டாளர்களால் எடுத்துரைக்கப் பட்டது. ஐக்கிய நாடுகள் அவையிலும் பாதுகாப்பு சபையிலும் சம நேரத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பிரான்சு நாடும் மிக முக்கியமன ஒன்றாக இருக்கின்றது எனவே பல்லின வாழ் மக்களின் சக்தியோடும் ஊடகங்களின் முக்கியத்துவத்தோடும் பிரான்சு நாட்டு மக்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரான்சு நாட்டினை செவிசாய்க்க வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.எனவே நாம் வாழும் நாடுகளை எமது அறவழிப்போராட்ட சக்தியாலே தமிழர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்க வைக்கமுடியும்.

தொடர்ச்சியாக 23 தடவையாக 2009ம் ஆண்டில் இருந்து நடைபெறும் மனித நேய ஈருருளிப்பயணத்தின் மூலம் வலுவான அரசியற் செய்தியினை பறைசாற்றியபடியே இன்று 14/09/2021 Strasbourg, Illkirch, Erstein , Benfeld, Sélestat , Ribeauvillé , Colmar மாநகரசபைகளில் முதல்வர்கள், மேற்சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்புக்கள் நடைபெற்றது. மனித நேய செயற்பாட்டாளர்களை பானங்கள் கொடுத்து இன்முகத்தோடு மாநகரசபை வரவேற்றது மட்டுமல்லாமல் பன்னெடுந்தூரம் சுமந்து வந்த நியாயமான கோரிக்கைகளினை தாம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் பிரான்சு அரச அதிபரிடமும் சமர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி தரப்பட்டத்து. மாநகரசபை முதல்வர்கள் தம் முகநூல் பக்கங்களிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் சார்ந்த பதிவுகளை இட்டு தம் ஆதரவுகளை தெரிவித்தனர்.

மேலும் பிரெஞ்சு தொலைக்காட்சியும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலைக்கான பயணம் தொடரும்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”

  • தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

www.mosaik-cristal.tv

https://www.mosaik-cristal.tv/23eme-tour-de-la-caravane-des-tamoules/

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment