தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம் 4ம் நாளாக 340Km தொலைவு கடந்து பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்தது.

இன்று காலை 05.09.2021 பிரேடா ,நெதர்லாந்து மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மற்றும் தமிழீழமே தமிழர்களுடைய நிரந்த தீர்வு என எழுச்சியோடு மனித நேய செயற்பாட்டாளர்கள் தம் பயணத்தை தொடர்ந்தார்கள். மேலும் நெதர்லாந்து கிளைப்பொறுப்பாளர் திரு ஜெயா அண்ணையும் வருகை தந்து பயணத்தினை ஆரம்பித்து வைத்தார்.

மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்!

இந்திய அரசிடம் ஐந்து  அம்சக் கோரிக்கையை முன்வைத்து நீர் கூட அருந்தாது பன்னிருநாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ”தீயாக தீபம் திலீபனின்  34ஆம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பிரான்சில் எதிர்வரும் வாரம் புதன்கிழமை ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத்தூபி முன்பாக ஆரம்பமாகின்றது.

மேலும்

சிறிலங்கா அரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் ஐந்தாவது நாளாக ஐ.நா நோக்கி தொடர்ந்து பணிக்கும் நீதிக்கான பயணம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும், அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 05/09/2021 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Vantoux நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Les Étangs, Brouck, Hombourg-Haut, Grundviller, Sarralbe, Sarre-Union, Eschwiller, Hirschland, Bourscheid, Phalsbourg, ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

மேலும்