இரண்டாவது நாளாகத் தொடரும்
ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணமும் நிழற்படக் காட்சிப்படுத்தலும்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 02/09/2021 அன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. Collégien, Bally-Romainvilliers, Coutevroult, Coulommes, Montceaux-lès-Meaux, Ussy-sur-Marne, Montreuil-aux-Lions, Epieds, Ville-en-tradenois, Tinqueux ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்கள், முதல்வர்களின் செயலாளர்களிடம் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. அனைத்து நகரசபைகளும் நீதிக்கான பயணத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளையும் விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார்கள். தங்கள் ஆதரவு தமிழ் மக்களுக்கு எப்போதும் இருக்கும் என்ற உறுதியையும் வழங்கினார்கள்.

மேலும்

பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணமும் நிணல்படக் காட்சிப்படுத்தலும்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 01/09/2021 புதன் கிழமை காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் பிரான்சு பாராளுமன்ற முன்றலிருந்து புறப்பட்டது. அத்துடன் பிரஞ்சு பாராளுமன்ற முன்றலில் காலை 10 மணி முதல் மாலை 17மணி வரை கவனயீர்பு மற்றும் தமிழர்ப்படுகொலை ஆதாரப் புகைப்பட காட்சிப்படுத்தல் நடைபெற்றது.

மேலும்