நினைவு மறவா முறியடிப்புச்சமர்.

2 0
Read Time:4 Minute, 51 Second

இந்தியப்படைகள் தமிழீழத்தை ஆக்கிரமிப்புச்செய்திருந்த நேரமது.தமிழீழ விடுதலைப்புலிகளால் இந்திய இராணுவ நகர்வுகள் முடக்கிவைக்கப்பட்டிருந்தன.

1987 .10.மாதம் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான செல்வராசாமாஸ்ரர் அவர்கள் தளபதி ஒருவரைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் கொக்குவில்லிலிருந்து மானிப்பாய் நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருந்தவேளை கொக்குவில்லிலிருந்து ஆனைக்கோட்டை நோக்கி இந்தியஇராணுவம் முன்னேறுவதாகத் தகவல் கிடைத்தது. அவர் உடனடியாகத் திரும்பிவந்து அங்கிருந்த குறைந்த போராளிகளை ஒருங்கிணைத்துக் குறைந்த ஆயுதவளத்துடன் ஒரு பாரிய முறியடிப்புத் தாக்குதலை முன்னேறிவந்த இந்தியப்படையினருக்கெதிராக கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் நடத்தினார்.காலை பத்துமணியளவில் ஆரம்பித்த சண்டை சுமார் ஒருமணிநேரத்த்திற்குமேல் நடைபெற்றது.இவ்வெற்றிகரத் தாக்குதலில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட இந்தியப்படையினர் கொல்லப்பட்டனர்.

பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.இத்தாக்குதலிலேயே முதன்முதலாக பசூக்கா என்கிற லோஞ்சர் வகையிலான ஆயுதமும் கைப்பற்றப்பட்டது.இத்தாக்குதலின் பின் இந்தியப்படை இரண்டுவாரமாக எந்தவித முன்னேற்றமுயற்சியிலும் ஈடுபடாது தமது இடங்களிலேயே முடங்கியி ருந்தது.இத்தாக்குதலின் வெற்றிக்கு வீரவேங்கை குலம் அவர்களின் செயற்பாடும் மிகவும் பலமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து போராளிகளைக கொண்ட ஒரு சிறிய அணியே இச்சமரில் பங்குகொண்டது.


இத்தாக்குதல் நடந்தசமயம் “இந்தியாருடே ” மற்றும் பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தனர். சண்டை நடந்த இடத்திற்கு விடுதலைப்புலிவீரர்கள் அவர்களை அழைத்துவந்து காட்டினார்கள்.அப்போது அவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பத்தியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இவர்களால் வெளியிடப்பட்ட செய்திகளா ல்தான் இலங்கையில் அமைதிகாக்க வந்த இந்தியப்படை என்னசெய்கிறது என்ற தகவல்கள் வெளிஉலகிற்க்குத்தெரியவந்ததன.
உலகத்தின் நான்காவது வல்லரசுப்படைகளை எதிர்த்துப் போரிடமுடியும் என்ற நம்பிக்கையை போராளிகள் மத்தியில உருவாக்கிய சண்டைகளில் இதுவும் ஒன்றாகும் .

குறுகியநேரத்திற்க்குள் குறைந்த போராளிகளைக் கொண்ட அணிகளை ஒருங்கிணைத்து இந்தியப்படைகளின் பாரிய முன்னேற்ற நடவடிக்கையை ஒரு அதிரடித் தாக்குதல் மூலம்
தடுத்துநிறுத்தி அத்தாக்குதலைச் செவ்வனே நெறிப்படுத்தி வழிநடத்திய பெருமை செல்வராசா மாஸ்ரரையே சாரும்.

செல்வராசாமாஸ்ரரின் போர் வியூகமும் வழிநடாத்தல் திறமையும் பெரிதும் வெளிப்படுத்தப்பட்ட சமர்களில் இதுவும் ஒன்றாகும். இவ்வெற்றிகரத்தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு எவ்விதஇழப்புகளுமில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில்
லெப்.கேணல்.பொன்னமான் அவர்களுக்கு அடுத்தாக ஏராளமான போராளிகளை உருவாக்கிய பெருமையும் செல்வராசாமாஸ்ரரையே சாரும்.

எழுத்துருவாக்கம்..சு.குணா.

வீரவேங்கை ..குலம்.
வீரச்சாவு.29.11.1987.

மேஜர்..செல்வராசாமாஸ்ரர்.
வீரச்சாவு..27.08.1990.

லெப்.கேணல்.பென்னம்மான்
வீரச்சாவு..14.02.1987.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment