தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் ஐரோப்பிய பாராளுமன்று முன் கவனயீர்ப்பு. 18.05.2021.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2021 செவ்வாய்க் கிழமை   ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்று முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.

மேலும்

பிரான்சு கிளிச்சியில் மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

பிரான்சில் நேற்று 18.05.2021 காலை 11.00மணிக்கு கிளிச்சி என்னும் இடத்தில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெற்றது.

மேலும்

பிரான்சு செவ்ரோன் நகரில் மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 பிரான்சில் காலை 10.00மணிக்கு செவ்ரோன் என்னும் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக செவரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலும்

யாழ்.மாநகர வீதிகளின் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பான கள ஆய்வில். முதல்வர்,வி.மணிவண்ணன்.

ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுகின்ற யாழ்.மாநகர வீதிகளின் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பான கள ஆய்வு பணி இன்று நடைபெற்றது. இக் கள ஆய்வில் யாழ்.மாநகர முதல்வர், பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், ஐ றோட் திட்ட ஓப்பந்தகாரர்கள் பங்குபற்றினர்.

மேலும்

பிரான்சு லாக்கூர்நொவ் நகரில் மே18 முள்ளிவாய்க்கால் நிகழ்வு!

பிரான்சு லாக்கூர்னோவ் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நண்பகல் 12.00 மணிமுதல் 14.00மணிவரை இடம்பெற்றது.

மேலும்

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற மே18 தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2021) செவ்வாய்க்கிழமை மழைக்கு மத்தியில் உணர்வோடு இடம்பெற்றது.

மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலான இணையவழி கூட்டு நினைவேந்தல்.

தமிழ்த் இனத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.இன்றைய நினைவேந்தல் நிகழ்வை கொவிட்-19 பேரழிவு வைரஸ் பரவல் காரணமாக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாகத் திரண்டு நினைவேந்த முடியாத நிலையில் வீடுகளில் இருந்து நினைவேந்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியிருந்தது.  

மேலும்

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2021 பற்றிய அறிவித்தல்!

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2021 எதிர்வரும் 17-07-2021 சனிக்கிழமையன்று நடைபெறும்.தற்போதுள்ள இடர்மிகு நிலை காரணமாக இவ்வாண்டு வளர்தமிழ்-1 தொடக்கம் வளர்தமிழ்-12 வரையான வகுப்புகளுக்கு புலன்மொழிவளத் தேர்வு இல்லாமல், எழுத்துத்தேர்வு மட்டுமே நடைபெறும்.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2021 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள திடலில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது.

மேலும்