இலங்கையின் உள்ளூராட்சி சட்டங்கள்.

0 0
Read Time:7 Minute, 41 Second

இலங்கையின் உள்ளூராட்சி சபை (Local government in Sri Lanka) என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். உள்ளூராட்சி சட்டங்கள்.

http://citizenslanka.org/…/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D…

• இலங்கையில் 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் உள்ளூராட்சி செயற்பாடுகள் மாகாண சபையின் கீழ் ஒப்படைக்கப்பட்டன.
• உள்ளூராட்சி நிறுவனங்களின் நடவடிக்கைகளின் நிர்வாகமும் மேற்பார்வையும் மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
• உள்ளூராட்சியு

சட்டத்தின்மூலம் அனுமதியளிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குதல் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொறுப்பாகும். குறித்த பிரதேசங்களின் மக்களின் வசதிகள், மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்காக சேவைகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.
உள்ளூராட்சி நிறுவனம் பின்வரும் சேவைகளை நடைமுறைப்படுத்துகிறது,
▪️ நிர்வாக மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் சேவைகள்
▪️ பொது சுகாதாரம் மற்றும் துப்புரவேற்பாட்டு மேம்பாடு
▪️ சூழலியல் பாதுகாப்பு
▪️ பொது பாதைகள் தெருக்கள் மற்றும் பொது வழங்கல் சேவைகளைப் பேணுதல்.
🔆
மாநகரசபைகள்
இலங்கையில் மாநகரசபை (Municipality) என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும்.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களிலும், 1886 ல், காலியிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 23 மாநகரசபைகள் உள்ளன.
🔺 1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகரசபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம்.
உள்ளூராட்சி சபைகளான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுகின்றது. இத்தெரிவான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.
மாநகரசபைக்கு மேயரே தலைவராவார்.
மாநகரசபையின் பொறுப்புக்கள்
▪️ சபையின் ஒழுங்குவிதிகள்,
கட்டுப்பாடுகள்
▪️ பொதுச்சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச் சேவை, போக்குவரத்து
▪️ பிரதேச மக்களின் பொதுநல வசதிகள்
மாநகரசபைக்குப் பொறுப்பாக
உள்ளூராட்சி அமைச்சர் இருப்பார். சுபையைக் கலைத்தல், பதவிநீக்கம் என்பன இவரின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படும்.
மாநகரசபையின் அதிகாரங்கள்
🔺 சபைக்கு தேவையான பதவிகளை உருவாக்கல்
🔺 அப்பதவிக்கு ஆட்களை நியமித்தல்
🔺 மாநகரசபை விதிகளின்படி அதற்குச் சொந்தமான எந்தக் கட்டிடத்தையும் (அமைச்சர் அனுமதியுடன்) ஏலத்தில் விற்றல், வாடகைக்கு விடல்
🔺 எல்லைக்குள் மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் விடயங்களைக் கண்டுபிடித்து தடுத்துத் தணிக்கை செய்தல்.
🔺 விதிகளுக்குட்பட்ட ரீதியில் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்
🔺 வீதிகளுக்கு மின்சாரம், நீர் என்பவற்றை வழங்குதல்
நிதிதிரட்டும் மூலங்கள்
🔺 சபை விதிக்கும் வரிகள்
🔺 அபராதம், தண்டம்
🔺 முத்திரை வரி விற்றல், வாடகைக்குக் கொடுத்தல், வாங்கல் மூலம் கிடைக்கும் பணம்
🔺 வருமானங்களும், நன்கொடைகளும்
🔺 அமைச்சரின் விசேட ஒதுக்கு நன்கொடை
யாழ்ப்பாண மாநகரசபை (Jaffna Municipal Council) என்பது யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இது தற்போது யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியையும், நல்லூர் தொகுதியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
இம்மானுவேல் ஆர்னோல்ட் (ததேகூ) மாநகர முதல்வராகவும், துரைராஜா ஈசன் (ததேகூ) துணை முதல்வராகவும் 2018 மார்ச் 26 இல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
யாழ் மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை இரண்டுமுறை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இம்மானுவேல் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை இழந்தார். இதனை அடுத்து 2020 December 30 அன்று இடம்பெற்ற முதல்வர் பதவிக்கான தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) உறுப்பினர் வி. மணிவண்ணன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிவண்ணன் 21 வாக்குகளையும், ஆர்னோல்ட் 20 வாக்குகளையும் பெற்றனர். மணிவண்ணனுக்கு ஆதரவாக ததேமமு உறுப்பினர்கள் 10 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர்

யாழ்ப்பாண மாநகரசபை

https://ta.m.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_மாநகரசபை

இலங்கை மாநகரங்களின்பட்டியல்

https://ta.m.wikipedia.org/…/%E0%AE%87%E0%AE%B2%E0%AE…

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம்https://ta.m.wikipedia.org/…/%E0%AE%87%E0%AE%B2%E0%AE…

அரசறிவியல் பகுதி 2 (உள்ளூராட்சிமுறை, கட்சி முறை, வெளிநாட்டுக் கொள்கை)- புன்னியாமீன்https://noolaham.org/wiki/index.php…http://www.clgf.org.uk/…/Country_profiles/Sri_Lanka.pdfhttp://www.clgf.org.uk/…/Country_profiles/Sri_Lanka.pdf

நன்றி Nishanthi Prabhakaran

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment