போற்றுதற் பொழுதாகப் புத்தாண்டே வருக

0 0
Read Time:1 Minute, 2 Second

போற்றுதற் பொழுதாகப்
புத்தாண்டே வருக


மாற்றத்தை எதிர்பார்த்து
ஏமாற்றம் கொண்டதும்
மறைவாய் மனதுக்குள்
மறுகிக்கிடப்பதும்
சீற்றம் கொள்ளலாகாது
சிறுமைப்பட்டிருப்பதும்
ஆற்றமுடியா வலிகளில்
அமிழ்ந்து துடிப்பதும்
கூற்றுவக் கொறோணாவால்
குடிமூழ்கிப் போவதுவும்
வேற்றவர் எம்மண்ணாள
வெம்பிச்சலிப்பதும்
மாறாதா என்று
மனங்கேட்க
ஏற்றங்கள் கொண்டு
இனியபல மாற்றங்கள் கண்டு
எம்தமிழீழத்தை எம்மிடமே தந்து
இசைபட வாழ்வுதர
போற்றுதற் பொழுதாகப்
புத்தாண்டே வருக
புதிர்கள் பலவற்றின்
விடையாகி வருக
புன்னகைப் பூக்களைப்
பூமியிற் சொரிக
புதுமை மாற்றங்கள்
அள்ளித்தருக.

கலைமகள்
01.01.2021

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment