அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு!

0 0
Read Time:1 Minute, 35 Second

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான ஓகஸ்ற் 30ம் திகதியினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 31.08.2020 திங்கள் அன்று சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.


தற்போது நிலவும் அசாதாரண சூழலிலும் அரசின் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சுவிஸ் தமிழர் அரசியல்துறை, இளையோர் அமைப்பு, பெண்கள் அமைப்பினரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வில் கனத்த இதயங்களுடன் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுச்சுடர், அகவணத்துக்கடன் ஆரம்பமாகிய இவ் ஒன்றுகூடலில் சிங்களப் பேரினவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையினை முன்வைத்து கண்காட்சி மற்றும் வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment