இன்றைய மாநகர சபை அமர்வும் மரணித்து போன மனித நேயமும்

0 0
Read Time:12 Minute, 25 Second

27.05.2019 அன்று எங்களுடைய சக மாநகர சபை உறுப்பினரான தனுஜனின் தந்தை விபத்திலே மரணமானார். சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அன்;றைய நாளில் அவ் துயரமான நிகழ்விற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

கடந்த மாதம் மாநகர சபை அமர்வின் போது அடுத்த மாநகர அமர்வு 10.07.2020 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு பின்னர் தான் குறித்த நாள் அன்றே தன்னுடைய அப்பாவின் 45 ஆவது நாள் வருவதனை தனுஜன் அறிந்து கொண்டார். தன்னுடைய அப்பாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை பேரையும் அன்றைய நாளில் அழைக்க வேண்டும் என்பதனால் அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் பொருட்டு கூட்டத்தினை வேறு ஒரு திகதியில் நடத்த முடியுமா என்று சபை செயலாளரிடம் கேட்டிருந்தார். அது நியாயமானது. சபை செயலாளரும் மனிதாபிமான அடிப்படையில் பதில் முதல்வர் அவர்களுடன் கலந்துரையாடி தபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளதன் காரணமக கூட்டத்தினை அடுத்த வாரத்திற்கு பிற்போட முடியாமையினால் குறித்த அமர்வினை 09.07.2020 அன்று நடாத்துவதற்கு தீர்மானித்திருந்தார். அது தொடர்பான கடிதங்கள் எமக்கு 06.07.2020 அன்று எமக்கு கிடைத்தது.

அக் கடிதத்தின் பிரகாரம் இன்று யாழ்.மாநகர சபை அமர்வுகள் தொடங்கின. கூட்டத்தின் ஆரம்பதில் இக் கூட்டம் சட்டவலுவற்ற கூட்டம் மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நடைபெறவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினார்களால் கூட்டிக்காட்டப்பட்டதுடன் சட்டவலுவற்ற இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அனைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
இது நடைபெற்ற சம்பவம்.

மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஒரு கூட்டமானது நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படவேண்டும் என்பது உண்மையான விடயம். மூன்று 3நாட்கள் முன்னறிவித்தலுடன் கூட்டம் கூட்டப்பட்டது மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிழையானது. ஆனால் அதனைக் காரணம் காட்டி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததினை ஏற்றுக்கொள்ள முடியாது மட்டுமல்ல அவர்கள் அதற்காகத்தான் வெளிநடப்பு செய்தார்கள் என்ற கருத்தும் ஏற்புடையது அல்ல

ஏன்எனனில் கடந்த இரண்டு அரை வருடங்களாக சபை கூட்டத்தொடர்களில் பல சட்ட வலுவற்ற விடயங்கள் நடந்திருக்கின்றன. பல மாநகர கட்டளைச் சட்டங்களினை மீறி நடக்கின்ற செயல்கள் நடைபெற்றன. அப்போது எல்லாம் நாங்கள் தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கின்றோம். அப்போது எல்லாம் மௌனமாக இருந்த இவ் கௌரவ உறுப்பினர்கள் இன்று கூட்டம் குறித்த திகதியை விடுத்து ஒரு நாள் முன்கூட்டியே நடாத்தப்பட்டு விட்டது என்று இக் கூட்டம் சட்டவலுவற்றது என்று கூறி வெளிநடப்பு செய்தது எந்த அடிப்படையிலானது.

கடந்த காலங்களில் கௌரவ முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அவர்கள் தலமை தாங்கிய மாநகர சபை அமர்வுகளில் பல சட்ட மீறல்களைச் சுட்டிக் காட்டிய போது அதற்கு கௌரவ முதல்வர் அவர்கள் ஆம் மீறப்பட்டுள்ளது அதனால் என்ன பிரச்சனை என்ன தீமை என்று வெளிப்படையாக கேட்ட போது அதற்கு ஆமா பாடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் (ஒருவரைத் தவிர) எல்லோரும் இன்று ஒரு சிறு விடயத்திற்கு பொங்கி எழுந்து வெளி நடப்பு செய்தது ஆச்சரியமாக இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கௌரவ முதல்வர் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் நடைபெற வேண்டிய கூட்டத்தினை வேறு ஒரு திகதிக்கு பிற்போட்டார்.
அத்துடன் ஒரு தடவை கௌரவ முதல்வர் தன்னுடைய தூரத்து உறவினரின் மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டத்தினை இடை நடுவில் நிறுத்தி விட்டு கலந்து கொள்ள சென்றார் அப்போது மனித நேயத்தின் அடிப்படையில் சபை அனுமதி வழங்கியது

நான் தவிர்க்க முடியாத காரணத்தில் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாது உள்ளது எனவே 27 ஆம் திகதி கூட்டத்தினை தலமை தாங்கி நடாத்தி தருமாறு கௌரவ முதல்வர் வழங்கி கடித்தின் அடிப்படையில் 28 ஆம் திகதி பிரதி முதல்வரால் நடாத்திய கூட்டம் சட்ட வலுவற்ற கூட்டம் என்று தெரிந்தும் அதனை சுட்டிக் காட்டி அக்கூட்டத்தில் கலந்து கொண்டும் இருந்தோம்.

இவ்வாறு பல்வேறு மாநகர கட்டளைச் சட்டங்களை மீறிய செயற்பாடுகள் சட்ட வலுவற்ற விடயங்கள் நடைபெற்ற போதும் நாம் பல்வேறு வகையில் அதனைச் சுட்டிக் காட்டி கூட்டங்களில் கலந்து கொண்டே வந்தோம்.

ஆனால் இன்று பல விடயங்களில் மௌனமான இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்றைய சபை நடவடிக்கைகளை ஒரு உறுப்பினரின் தநதையின் நினைவு நாளுக்காக ஒரு நாள் முன்கூட்டி கூட்டப்பட்ட கூட்டம் சட்டவலுவற்றது என்ற காரணத்தினால் வெளிநடப்பு செய்தது சரி தானா?

சுமந்திரன் அவர்கள் உடன் கலந்து கொள்வதற்காக கூட்டம் பிற்போடலாம், மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டத்தை ஒத்தி வைக்கலாம், 27 ஆம் திகதி வைக்க வேண்டும் என்ற கூட்டத்தை 28 ஆம் திகதி வைக்கலாம். ஆனால் ஒரு சக உறுப்பினரின் நினைவு நாளில் பங்கு பற்றவதற்கு ஒரு நாள் முன் கூட்டிவைக்கப்பட்ட கூட்டம் சட்ட வலுவற்றது யாரை கேட்டு திகதியை மாற்றினீர்கள் என்ற கருத்துடன் கூட்டத்தைப் புறக்கணிக்கின்றார்கள். பாரிய தவறுகள் நடைபெறும் போது எல்லாம் மௌனமாக இருந்தவர்கள் இன்று பொங்கி எழுந்த்தார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தை புறக்கணித்ததற்கு முக்கியகாரணம் கூட்டம் ஒரு நாள் பிற்போட்டப்பட்டதற்காக அல்ல. அவர்களுக்கு பிரதி முதல்வர் மீது உள்ள ஓரவஞ்சனையே கடந்த கூட்டத்தில் முதல்வரின் தனிப்பட்ட ஆளணியினை நிறுத்துவதற்கான பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விட்டு அதனை நிறைவேற்றி அவர்களை நிறுத்திய காரணத்திற்காக மட்டுமே. இவர் குறித்த கதிரையில் இருக்க கூடாது அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பற்காகவே இவ்வாறு நடந்து கொண்டார். அதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம் தான் கூட்டத்தின் சட்ட வலுவற்ற தன்மை.

இங்கு கதிரையில் இவர்தான் இருக்க வேண்டும் என்பதே இவர்களுக்கு முக்கியமாக தெரிகின்றது. அதற்காக எதையும் செய்ய தயாராக உள்ளனர். இன்று பிரதி முதல்வர் இக் கதிரையில் இருக்க கூடாது என்பதற்காக சொந்த கட்சியினாரால் பழிவாங்கப்பட்டார். என்னைப் பொறுத்தவரை இது புதுமையான விடயம் எல்ல. இதை தான் இவர்கள் பாராளுமன்றத்திலும் செய்கின்றார்கள். கதிரையில் யார் இருக்க வேண்டும் என்பதனை தீர்மானிப்பதற்கு பதிலாக கதிரையில் இவர்தான் இருக்க வேண்டும் என்று செயற்பட்டவர்கள். அது தான் இன்று மாநகர சபையிலும் நடைபெற்றது.

குறித்த கூட்டம் சட்டவலுவற்ற கூட்டம் அதனால் அதில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி வெளியேறியவர்கள் ஒன்றை மட்டும் தெளிவு படுத்த வேண்டும். சட்டவலுவற்ற கூட்டம் என்று தெரிந்து கொண்டு அக் கூட்டத்திற்கு தாங்கள் அனைவரும் ஏன் வருகை தந்தீர்கள்? கூட்டங்களுக்கு வருகை தராமல் இது ஒரு சட்ட வலுவற்ற கூட்டம் அதனால் எம்மால் பங்குபற்ற முடியாது என்று அறிவித்திருக்கலாம். அதை விட முக்கியமாக விடயம் நீங்கள் கூறுகின்ற சட்டவலுவற்ற கூட்டத்தில் கலந்து கொண்டமைக்கான கையொப்பம் வேறு இட்டுவிட்டு சபை அமர்வுக்கு வந்து இன்றையகூட்டம் சட்டவலுவில்லை என்று வெளிநடப்பு செய்தது ஏன்?

ஆக உங்களுடைய தனிப்பட்ட உள்வீட்டு முரண்களை பழிதீர்த்தக்கொள்வதற்காக ஒரு ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக்காக திகதி மாற்றப்பட்டதனை ஆயுதமாக எடுத்துள்ளீர்கள். நீங்கள் உள்வீட்டு முரண்களை பழிதீர்பதாக நினைத்துக் கொண்டு ஒரு நல்ல மனிதனின் ஆத்மாவை கலங்கப்படுத்தியிருக்கின்றீர்கள். தன் தந்தையைப் பறிகொடுத்த அந்த உறுப்பினரின் மனம் தங்களது செயற்பாடுகளால் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். கடந்த காலங்களில் இவ்வாறான பிரச்சனைகள் வந்த போது நாங்கள் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்திருந்தோம் பொறுமை காத்தோம் ஆனால் இன்று உங்களிடம் அதனை காணவில்லை ஒரு துளி கூட. சுருக்கமாக சொல்வதென்றால் மரண வீட்டில் சுய தனிப்பட்ட உள்வீட்டு முரண்களை பழிதீர்பதற்கான அரசியலை மேற்கொண்டீர்கள். மனித நேயம் மரணித்து விட்டதேயே இன்றை சபை அமர்வு எனக்கு உணர்த்தியது

வரதராஜான் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment