சுவிசில் கரும்புலிகள் நாள் 2026
மேலும்உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – 2026.
தமிழரின் தேசிய சுதந்திர இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதையில் முப்படைகளையும், இறையாண்மை மிக்க அரசிற்கான நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி, நடைமுறைத் தமிழீழ அரசை நிறுவிய வரலாற்று நாயகன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு 31.05.2026, இன்று சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரிலுள்ள Schulhausstrasse 12, 8182 Hochfelden என்ற இடத்தில், மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஒழுங்குபடுத்தலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும்எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 11ஆவது தடவையாக நடாத்திய ‘எழுச்சிக்குயில் 2026’ தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி கடந்த மே 8, 9 சனி, ஞாயிறு இருநாள்களும் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த கலைஞர்களுள் தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை சுவிஸினால் சேகரிக்கப்பெற்று வடிவமைக்கப்பெற்ற 72 கலைஞர்களின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும்சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி
கேணல். ரமணன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006
மேலும்மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 2026 – சுவிஸ்
சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026!
மேலும்பிரான்சில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு எழுச்சிப் பேரணியும் நினைவேந்தலும்!
பிரான்சில் தமிழின அழிப்பின் உச்ச நாளான மே 18 முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு எழுச்சிப் பேரணியும் நினைவேந்தலும் 18.05.2026 திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்தது.
மேலும்பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல்!
பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல் கடந்த 16 .05.2026 சனிக்கிழமை பிற்பகல்.இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரான்சி நகரபிதா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தியதுடன் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும்மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத நாள்……18.05.2009
17வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது .
மேலும்முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு:நியூசிலாந்தில்
18.05.2026 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்குநியூசிலாந்தின் Auckland நகரில் அமைந்துள்ளNo:202, Hillsborough Rd, Hillsborough 1042 இல்முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தல் நிகழ்வுமிகுந்த உணர்வுபூர்வமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றது.
மேலும்