தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம் : பிரித்தானியா (02.09.2021) – ஐக்கிய நாடுகள் அவை சுவிசு (20.09.2021)

0 0
Read Time:2 Minute, 41 Second

சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியபடி எதிர்வரும் 02.09.2021 அன்று பிரித்தானியாவின் பிரதமர் இல்லத்தில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பித்து 20.09.2021 அன்று ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்) நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஒருமித்த குரலாக தமிழர்களின் வேணவாவினை பறைசாற்ற இருக்கின்றது.

.நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள்.

•02.09.2021 பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக பி.ப 3 மணி

•03.09.2021 அன்று Netharlands , Den hag ல் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்பாக பி.ப 1 மணி

• 06.09.2021 அன்று Belgium, Brussels ல் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் முன்றலில் பி.ப 1 மணி

  • 13.09.2021 அன்று France,Strasbourg ல் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன் காலை 9 மணி தொடக்கம் பி.ப 10.30 மணி வரை கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு இறுதியாக
  • 20.09.2021 அன்று பி.ப 2.30 மணி Switzerland, Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை (ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்) “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் வரிகளை நெஞ்சில் நிறுத்தி இவ்வறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற தவறாதீர்கள்.

“காலத்திற்கேற்ப வரலாற்றுக்கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் நாம் கொண்ட இலட்சிய நோக்கம் மாறாது”

  • தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment