கப்டன் இளம்தீ அவர்களின் 13வது ஆண்டு நினைவுநாள் இன்று

0 0
Read Time:2 Minute, 18 Second

2007ம் ஆண்டு அமைப்பில் இணைந்த கப்டன் இளம்தீ,  கனரகஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இணைந்து அதில் தனக்கான பயிற்சிபெற்று போராளிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்த வேளையில்

அம்முகாம் பொறுப்பாளரால் கடற்புலிகளின் சிறப்புத் தளபதிக்கு இவரைப்பற்றிய செயற்பாடுகள் தெரியப்படுத்தப்பட்டதால் சிறப்புத்தளபதியால் தனது மெய்பாதுகாப்புப்ணிக்கு உள்வாங்கப்படுகிறார். அங்கு சிறிதுகாலம் மிகச்சிறப்பாக கடமையாற்றிக் கொண்டிருந்த  வேளையில் தன்னை சண்டைக்கு அனுப்பும்படி அடிக்கடி சிறப்புத்தளபதியிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இவர் தாக்குதலணிக்கு மாற்றப்படுகிறார். கடற்புலிகளின் தரைத்தாக்குதலணியின் அநேகமான சமர்க்களங்களில் அதாவது எம்மால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகினும் சரி, எதிரியால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புச் சமராகிலும் சரி பங்குபற்றியவன். இவனது தனித்திறமையால் பொறுப்பாளர்களாலும் தளபதிகளாலும் பாராட்டப்பட்டான். 05.09.2008.அன்று மன்னாரில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடி தமிழீழ மண்ணை முத்தமிடுகிறான். குறுகியகாலம் தான் இயக்கத்தில் என்றாலும் அக்காலப்பகுதியில்  எவ்வளவு சாதிக்கமுடியுமே அவ்வளவுக்கு அவ்வளவு சாதித்துக் காட்டிய ஒருபெரும் வீரனாவான். 

கப்டன்- இளம்தீ
(ஜேசுராசா எட்வின் ஜெயராஜ்)
யாழ் மாவட்டம்
வீரச்சாவு 05.09.2008


எழுத்துருவாக்கம்..சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment