Read Time:1 Minute, 13 Second
பாரிசின் புறநகரப் பகுதியான பொண்டி 93 பிரதேசத்தில் நேற்று 15.05.2021 (சனிக்கிழமை) மே 18 கவனயீர்ப்பும், வணக்க நிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை மாவீரர் பணிமனை உறுப்பினர் திரு.பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
இந்நிகழ்வில் பொண்டி நகர பிதா அவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வன் நிந்துலன் அவர்களின் உரை, பொண்டி தமிழ்ச் சோலை மாணவியரின் எழுச்சி நடனம், கவிதை எனபனவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














