Read Time:1 Minute, 18 Second
சுவிஸில்.முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கும், பொதுச்சுடரேற்றலுடன், மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது நினைவஞ்சலி.நிகழ்வில். தமிழ் மக்களின் உணர்வெழுச்சியுடன்.சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.