Read Time:1 Minute, 22 Second
இலங்கை அரசின் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கனடா – ரொரண்டோ(Toronto) நகர மேயர் ஜோன் டோரி மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோர் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக தொடரும் இவ்வாறான அநியாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதற்கு அனைவரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் சமூகத்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்களும் யாழ் மாநகர முதல்வர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
