யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் ,குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் காலை முதல்வரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. அதேவேளை ,20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு பட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று எனக்கு மேற்கொண்ட கோவிட்-19 பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னோடு கடந்த ஒரு வாரத்திற்குள் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாக முன்வந்து PCR பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுங்கள். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் நல்லூர்- +94 (77) 121 0685, யாழ்ப்பாணம்- +94 (77) 292 0280, hotline-tel: 021 222 6666. நான் நலமோடு உள்ளேன்.
