சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தி.

0 0
Read Time:2 Minute, 20 Second

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை கோட்டபாஜ ராஜபக்சவின் ஆட்சிக்கு பின் மிக மோசமடைந்துள்ளதாகவும் அவரின் அரசில் போர்குற்றங்களில் அங்கம் வகித்த படையினரே உயர்நிலை பதவிகள் வகிப்பதனாலும் நீதி வழங்குதல்,

பொறுப்பு கூறல், சரியான பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு இன்மை, ஊடகங்களுக்கான அச்சுறுத்தல், நீதி கோரும் நபர்கள் அச்சுறுத்தப்படல் போன்ற காரணங்களால் நிலமை இன்னும் மோசமடைவதாகவும் அதனால் ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை இதனை கவனத்தில் கொள்ளுமாறு ஐ.நா வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து.இதன் தொடர்ச்சியாக சுவிஸ் நாட்டின் அகதிகள் சார்ந்த திணைக்களம் (OSAR) சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு (SEM) அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.அறிவுறுத்தலாக இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புதல் கூடாது எனவும், அகதிகளின் நிலமைகளை இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மீள்ஆய்வுக்கு உட்படுத்தியே அகதிகளுக்கான தீர்மானங்களை வழங்க வேண்டும் எனவும் அத்துடன் இலங்கை சுவிற்சர்லாந்து நாடுகளுக்கிடையே அகதிகள் விடயம் சார்ந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் இவ்வாறான ஒப்பந்தங்கள் மனித உரிமையை பின்பற்றும் நாடுகளிடையே மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் என தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

செய்தி இணைப்பு :https://asile.ch/…/osar-la-pratique-en-matiere-dasile…/https://www.ohchr.org/…/LK/Sri_LankaReportJan2021.docx

நன்றி

சுவிஸ் தமிழர் தகவல் மையம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment