மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

0 0
Read Time:5 Minute, 21 Second

25.12.2005 அன்று மட்டகளப்பு நகரில் அமைந்துள்ள மேரி தேவாலயத்தில் நத்தார் பண்டிகை திருப்பலியின்போது ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து செயலாற்றும் தேச விரோத கும்பலால் TMVP பிள்ளையான் மற்றும் அவனது சகாக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

சுயநலவாழ்வைத் துறந்து, பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து, அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உத்தம மனிதரை இன்று தமிழர்தேசம் இழந்துவிட்டது.

தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக்குரல் இன்று ஒடுங்கிவிட்டது. பகைவனின் கோழைத்தனமான கோரமான தாக்குதலுக்கு ஒரு மகத்தான மனிதர் பலியாகிவிட்டார். இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு.

திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர், அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான அரசியல்வாதி. தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்ட சிறந்த மனித உரிமைப் போராளி. அனைவரையும் கவர்ந்த ஒரு தமிழினப் பற்றாளர். இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.

சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த அடக்குமுறையிலிருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலைபெற்று சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரிந்துகொண்டார். இந்த இலட்சியத்தால் உந்தப்பெற்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தார். பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பல்வேறு அச்சுறுத்தல் களுக்கும் ஆபத்துக்களுக்கும் மத்தியில் மிகுந்த துணிவுடன் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் பல்வேறு வழிகளில் கைகொடுத்துதவினார். மட்டக்களப்பு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் நிறுவுனர்களில் ஒருவராகவும் தமிழீழ மக்களது உரிமைக்காக இடையறாது தொடர்ந்து உழைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் உண்மைகளையும் உலகுக்குப் பரப்புரை செய்தார். அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, என்றுமே பாராட்டுக்குரியவை.

திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப்பணியை கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசியவிருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகனாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர் என்றும் வாழ்வார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment