Read Time:1 Minute, 5 Second

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள்ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1200 நாட்களிற்கும் மேலாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மதியம் 11.30மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் போன தனது மகனை தேடி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து உயிரிழந்த தந்தையான சின்னசாமி நல்லதம்பியின் உருவம் தாங்கிய பதாதையை ஆர்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழப்பியிருந்ததோடு அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.