ஊடக அறிக்கை
2022 நவம்பர் 27
2022 நவம்பர் 27 ஞாயிற்றுக் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத் தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்க விடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக “தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல்” இடம்பெறும்.
குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், சிவில் சமூக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் பங்கேற்று, “தமிழ் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களுக்கு” உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நினைவேந்தல் இடம்பெறும் கிட்டிய தூரத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு முடிந்தவரை நேரில் வருகை தருமாறும் அழைக்கின்றோம்.
கூடவே “எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழிச்சி” என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் “நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் மாவீரத்தை” தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக் கடமையை, “தரம் தாழ்ந்து போகாது சிரம் உயர்த்தி” நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்
தொடர்புகளுக்கு:
தலைவர், கோ.ராஜ்குமார் 0094 77 854 7440
செயலாளர், தி.நவராஜ்
ஊடகப்பேச்சாளர், அ.ஈழம் சேகுவேரா